Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலில் தானே போட்டியிடுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அலரி மாளிகையில் ஐ.தே.கவின் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

நாளை அலரி மாளிகையில் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஹபீர் காசிம் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

அவருடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடுமையாக தர்க்கித்தார். கட்சி ஒரு முடிவை எடுத்தால் அதற்கு கட்டுப்பட வேண்டும், பகிரங்கமாக எப்படி வெளியில் விமர்சிப்பீர்கள் என கிரியெல்ல கூற இருவருக்குமிடையிலான தர்க்கம் உச்சமடைந்து ஹபீர் காசிம் வெளியேறினார்.

வேட்பாளராக போட்டியிட எவரும் முட்டி மோதிக் கொள்ள வேண்டியதில்லை. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். போட்டியிட்டு நான் வெற்றி பெற்று காட்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் காமினி ஜெயவிக்ரமா பெரேரா, ஜோன் அமரதுங்கா, ரவி கருணநாயக்க, அகிலா விராஜ் கரியவாசம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார, மற்றும் தயா கமகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget