அரசாங்கத்தால் அண்மையில் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 8,500 புதிய செயற்திட்ட உதவியாளர்கள் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிற்கும் ஒருவர் என்ற ரீதியில் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் கையொப்பமிட்டு வந்த புதிய நியமனதாரிகள் இன்று தேர்தல் செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த நியமனம் வழங்கப்பட்டதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலின் பின்னரே கடமைகளை பொறுப்பேற்கலாம் எனவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
எதிர்கால தேர்தல் தேவைக்காக தமது ஆதரவாளர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டதோடு, குறித்த நியமனங்கள் ஐ.தே.க மற்றும் பங்காளிக்கட்சிகளின் எம்.பிக்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment