ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.ரயில் நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
தொழிற்சங்க நடவடிக்கையால், இன்று காலை பயணிக்க இருந்த அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து தபால் ரயில்களின் சேவைகளும் நேற்று இரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியத்தைத் தடுக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Post a Comment