Ads (728x90)

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமானது உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, செரித்தலை சீராக்கி வியிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களில் கருப்பை, மாதவிலக்கு நேரங்களில் அடி வயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை கூடும்.

இஞ்சி சாறுடன் வெங்காய சாறும் கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சியானது இதய இரத்த குழாய்களின் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget