Ads (728x90)

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படுகின்றன.

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் 12 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா வித்தியாலயம், கொழும்பு இந்துக்கல்லூரி, களுத்துறை ஞானோதயா மகா வித்தியாலயம், இரத்திபுரி மிஹிந்து கல்லூரி, குருநாகல சென் அன்னேஸ் கல்லூரி, கண்டி கிங்வூம் கல்லூரி, விகாரமகாதேவி பாலிக வித்தியாலயம் கண்டி, விகாரமகாதேவி பாலிக வித்தியாலயம் பதுளை, ஊவா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மதிப்பீட்டு பணிகள் நடக்கின்றன. இந்த பாடசாலைகள் செப்ரெம்பர் 16ம் திகதி மீள திறக்கப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget