திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போன்றே இன்றும் கூட்டணின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என்றும், இன்று வலுப்பெற்று வரும் சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment