அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்த வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும், தன்னை அதிலிருந்து விடுவிக்குமாறு தெரிவித்து மேற்கொண்ட அடிப்படை ஆட்சேபனையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.
குறித்த உத்தரவு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ்வழக்கிலிருந்து குறித்த 8 பேரையும் விடுவிக்கும் உத்தரவை வழங்கியது.

Post a Comment