புற்றுநோயால் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவரது உடலை ஆலய வளாகத்திலுள்ள விகாரையில் தகனம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் பொலிசாரிடம் இது குறித்து முறையிட்டனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய தடைவிதித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரர் சட்டவிரோதமாக ஒரு விகாரை அமைத்து, அதற்கு குருகந்த ரஜமகா விகாரையென பெயர் சூட்டியிருந்தார். இதனால் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விடயம் குறித்து நேற்று இரவு முல்லைத்தீவு மேலதிக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொலிசார், ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலத்தை அங்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்துவதை தடை செய்ய முடியாதென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment