
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகாத நிலையில், இன்று இடம்பெறவுள்ள அஞ்சல்மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தாங்கள் கோரமுடியாது என்று 5 கட்சிகள் சார்பில் சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தமிழ் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, 5 தமிழ்க் கட்சிகளினால், மேற்கொள்ளப்பட்ட தீர்மான அறிக்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.கபிலராஜ்ஜினால் வாசிக்கப்பட்டு இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.
Post a Comment