சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் தீயிட்டு அழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொருளை எரித்து அழிக்கும் பணி நேற்று காலை இடம்பெற்றது. இதனை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்திருந்தார்.
கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment