Ads (728x90)

உலகில் எந்த நாட்டில் அதிக அளவில் படித்தவர்கள் இருக்கின்றனர் என்ற வரிசையில் கனடா 56.27 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு மிகப் பெரிய சொத்தாக பார்க்கப்படுகிறது. கல்வி தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். ஒரு நாட்டின் சிந்தனையை மாற்றுவதே அந்நாட்டின் கல்வியறிவு தான்.

அந்த வகையில் உலகளவில் எந்த நாட்டில் அதிகம் படித்த மக்கள் இருக்கின்றனர் என்ற புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. இது ஒரு நாட்டின் 25 முதல் 64 வயதுடையவர்களின் சதவீதத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது.

அவர்கள் இரண்டு அல்லது நான்கு ஆண்டு பட்டம் படித்திருக்க வேண்டும் அல்லது தொழில் திட்டத்தின் வடிவத்தில் ஒருவித மூன்றாம் நிலை கல்வியை முடித்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை OECD (Organisation for Economic Co-operation and Development) வெளியிட்டுள்ளது.

1.கனடா
உலகில் அதிகம் படித்தவர்களுக்கான நாடுகளின் பட்டியலில் கனடா 56.27 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. கனடாவின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ மக்களைக் கற்றுக்கொள்ளவும், சிந்திக்கவும், மாற்றியமைக்கவும் எங்களுக்கு கல்வி தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2.யப்பான்
ஆசிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இது பார்க்கப்படுகிறது. இந்த நாடு உலக கல்வியறிவு கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கிருக்கும் மக்கள் தொகையில், 50.50 சதவீதம் பேர் படித்தவர்களாக இருக்கின்றனர்.

3.இஸ்ரேல்
இஸ்ரேல் தொழில்நுட்பரீதியாக முன்னேறிய நாடு ஆகும். இங்கு பெரும்பாலும் அனைத்து விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றே கூறலாம். இஸ்ரேல் கல்வியின் அடிப்படையில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிருக்கும் மக்கள்தொகையில் 49.90 சதவீதம் படித்தவர்களாக உள்ளனர்.

4.தென்கொரியா
தென் கொரியாவில் உயர்கல்விக்கான தேவை மிகவும் வலுவானது. ஏனெனில் கல்விக்காக மட்டும் இந்த நாட்டின் அரசாங்கம் 43.1 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செல்வழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இங்கிருக்கும் மக்களில் 46.86 சதவிதத்தினர் படித்தவர்களாக உள்ளனர்.

5.பிரித்தானியா
பிரித்தானியா மிகச் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கிய நாடு என்று கூறப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகளில் நீண்ட வரலாறு இந்த நாட்டில் உள்ளது. இங்கு ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கிருக்கும் மக்கள் தொகையில் 45.96 சதவீதம் பேர் படித்தவர்கள்.

6.அமெரிக்கா
அமெரிக்காவில் இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் வயது வந்தவர்களில் சுமார் 33 சதவீதம் பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்கள். இங்கு 45.67 சதவீதம் பேர் படித்தவர்களாவர்.

7.அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலியாவில் ஆண்களும் பெண்களும் ஒப்பீட்டளவில் அதிக ஆயுட்காலம் கொண்டுள்ளதனர். கல்வியைப் பொறுத்தவரை, அதன் மக்கள் தொகையில் 43.74 சதவீதம் பேர் படித்தவர்கள்.

8.பின்லாந்து
பின்லாந்து கல்வியை வழங்குவதில் ஒரு சர்வதேச தலைவராக உள்ளது. இங்கு சிவில் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தில் அதன் செயல்திறன் உயர்ந்த இடத்தில் உள்ளது. இங்கு மக்கள் தொகையில் 43.60 சதவீதத்தினர் படித்தவர்கள்

9.நோர்வே
ஐந்து மில்லியன் பேர் வாழும் இந்த நாட்டில் 43.02 சதவீதத்தின் படித்தவர்களாக இருக்கின்றனர்.

10.லக்சம்பேர்க்
ஐரோப்பியாவின் மிகச் சிறிய நாடு தான் லக்சம்பேர்க். இந்த நாட்டில் இருக்கும் மக்கள் தொகையில் 42.86 சதவீதத்தினர் படித்தவர்கள் இருக்கின்றனர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget