Ads (728x90)

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்தது. அதற்கமைய நாடு முழுவதிலும் சுமார் 80% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு மிகவும் சுமுகமான நிலையில் இடம்பெற்றது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்ததுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்களாவர்.

வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வாக்குகள் எண்ணும் பணி விசேட பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget