ஜனாதிபதி தோ்தல் வாக்கெண்ணும் பணிகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஜனாதிபதி யாா் என்பது அறிவிக்கப்படும் என தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய கூறியுள்ளாா்.
மேலும் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி நள்ளிரவுக்கு முன் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நேற்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதனையடுத்து நேற்று மாலை 5.15 மணியளவில் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெறுகின்றன.
தற்போது வாக்குப்பதிவின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 80 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
மேலும் இன்று மாலை வெற்றிபெறும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும், அவர் நாளை திங்கட்கிழமை காலையில் பதவி ஏற்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment