Ads (728x90)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக, நுழைவாயிலிருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்ற அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருடாந்தம் 6 மில்லியன் பயணிகள் வருகை தருவதற்கான வசதிகள் மாத்திரமே உள்ள போதிலும், தற்போது 12 மில்லியனாக பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அதற்கு பொருத்தமான அபிவிருத்திகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டது.

எனினும் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அதற்கமையவே இந்த பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget