சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை 5மணிவரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை வெளியான தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனமே ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்திருந்ததாக கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சஜித்தின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே பாவிக்கப்படவில்லை எனினும் கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சியென்பது குறிப்பிடப்பட்டுள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் யாரும் நிறைவேற்றுவதில்லை. ஆனாலும் சஜித்தின் விஞ்ஞாபனம் ஏற்கக்கூடியது என சுமந்திரனும் குறிப்பிட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சஜித்தையே ஆதரிக்க வேண்டுமென குறிப்பிட்டனர்.
இதையடுத்து சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற முடிவை இலங்கை தமிழ் அரசுக்கட்சி மேற்கொண்டது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடனும் பேசி உத்தியோகபூர்வமான அறிவித்தலை விடுவதென தீர்மானிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment