ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான காலப்பகுதியே எஞ்சியுள்ளது. ஒன்றரை மாதங்களுக்கும் அதிகமாக இடம்பெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களும் தமது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்து, ஒன்றரை மாதங்களாக தமது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தல் சட்டத்திற்கமைய நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து பரப்புரைகள் நிறுத்தப்பட்டதுடன், 48 மணித்தியால அமைதி நேரம் தற்போது நடைமுறையிலுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment