Ads (728x90)

கோத்தாபயவின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயல்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்வேறு தடைகள் மற்றும் நிபந்தனைகளையும் தாங்கிக் கொண்டு நாட்டின் நலனுக்காகவும், கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காகவும் தங்களை அர்ப்பணித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தாங்கள் எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலில் மிகவும் பாரிய கிடைத்துள்ளதாகவும், பெற்றுக் கொண்ட வெற்றியை அனைத்து மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் கொண்டாடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget