Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

52.25 சதவீத வாக்குகளை பெற்று இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளை அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget