Ads (728x90)

புதிய ஆளுநர்கள் 6 பேர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக சீதா அரம்பேபொல, தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே, மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே, வட மேல் ஆளுநராக A.J.M. முஸம்மில், சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ, ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ராஜா கொல்லுரே ஆகியோர் புதிய ஆளுநர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget