Ads (728x90)

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச காபந்து அரசாங்கத்தின் பிரதமராக உத்தியோகப்பூர்வமாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

இதன்போதே அவர் பிரதமராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள இவர், இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கையின் 23ஆவது பிரதமராவார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget