முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் இடம்பெறவுள்ளன. அவை திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
பின்னர் படிப்படியாக நாளாந்தசேவையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்துள்ளார்.
தற்போதைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் உலக யுத்ததின் போது பிரித்தானிய இராணுவத்தினால் அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பலாலிக்கும் இரத்மலானைக்கும் இடையில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment