Ads (728x90)

போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவேந்தல் நடத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ள கோத்தபாய  ராஜபக்ஷ, அவர்கள் பயங்கரவாதிகள் எனவும், அவர்கள் நடத்தியது விடுதலைப் போராட்டம் அல்ல பயங்கரவாதப் போராட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மாவீரர் நாளை  பகிரங்கமாகக் கடைப்பிடிக்கின்றனர். நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரும் அதற்கு அனுமதி வழங்குவீர்களா?' என்று சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புலிகளின் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என்று நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்தப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம். நாட்டை நிர்மூலமாக்கிய போராட்டம். அப்போராட்டத்தை 2009ஆம் ஆண்டு எமது இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிச் செய்தியை அறிவித்தார்கள்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டப்பட்டது. எமது ஆட்சியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமைதான் தொடரும். போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிக்க மாட்டேன் என்றார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget