Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கம் அளித்துள்ளார்.

வாக்காளர் ஒருவர், போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். விரும்பினால் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பங்களை மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு அளிக்க முடியும்.

மூன்று வேட்பாளர்களிற்கு வரிசைப்படி வாக்களிக்க விரும்பினால், வாக்காளரின் முதலாவது தெரிவின் முன்பாக உள்ள பெட்டியில் 1 என குறிப்பிட்டன் பின்னர், விரும்பும் ஏனைய இரண்டு வேட்பாளர்களின் பெயரின் முன்பாக உள்ள பெட்டியில் விருப்ப வரிசைப்படி 2,3 இலக்கங்களை குறிப்பிட வேண்டும்.

வாக்காளர்கள் தங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பங்களை சுட்டிக்காட்ட விரும்பவில்லை என்றால், வேட்பாளரின் பெயருக்கு முன்னால் உள்ள பெட்டியில் வழக்கமான X அடையாளத்தை இட்டு ஒரு வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்க முடியும்.

ஒரே வாக்குச்சீட்டில் முதல் தெரிவிற்கு X அடையாளமும், அடுத்த இரண்டு தெரிவுகளிற்கு 2,3 என இலக்கமிடுவதும் தவறானதாகும். அது செல்லுபடியற்ற வாக்காகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget