நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் வாழ்க்கை செலவு குழுவின் அனுமதியின்றி விலையை அதிகரிக்க முடியாதென மங்கள அறிவித்தல் விடுத்திருந்தார். அத்துடன் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து விலை அதிகரிப்பு முடிவை பிரிமா கைவிட்டது.
இதேவேளை, நாளை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், எந்த கலந்துரையாடலுமின்றி பிரிமா விலை அதிகரிப்பு அறிவித்தல் விடுத்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியின்றி மீண்டும் கோதுமை மாவின் விலையை 8 ரூபாவால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment