யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியில் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ். கலாச்சார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
1800 மில்லியன் ரூபா செலவில் 12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் கலாச்சார நிலையமானது 600 பேரை உள்ளடக்க கூடியதான மண்டபத்தை கொண்டதாக அமையவுள்ளது.
இது இணையத்தள வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியக நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புகளை நடத்துவதற்கான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment