Ads (728x90)

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிப்பிரச்சினைக்கு சிறந்தவொரு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று முல்லைத்தீவு முள்ளியவளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான, அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். பெண்களை மையப்படுத்திய குடும்பங்களுக்கு தேவையான பொருளாதார வசதிகளை கொடுப்போம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தச் சலுகைகளும் இப்பிரதேசங்களில் வழங்கப்படவில்லை. எமது அரசில் வடக்கு, கிழக்கு வெவ்வேறாக இரு ஜனாதிபதி மையங்களை உருவாக்கி மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நடவடிக்கையை எடுப்பேன் என்றார்.

விசேட தேவையுடையவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். வீடுகள், காணிகள் இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பேன்.

30 வருடக் கொடிய யுத்தத்தில் நானும் என் தந்தையை இழந்தேன். அதேபோல் தான் இங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் நீங்கள் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் இந்த யுத்தத்தின் மூலம் இழந்திருப்பீர்கள். அதன் கவலை எனக்குப் புரிகிறது. எனவே பிரிபடாத இலங்கைக்குள் சிறந்த ஒற்றுமை மிக்க சூழலை உருவாக்கி சுதந்திரமாக இந்நாட்டில் ஒரு குடையின் கீழ் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வேன் என்றார். 
     

Post a Comment

Recent News

Recent Posts Widget