ஜனாதிபதித்
தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர்
பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது.
நடைபெற்று
முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களும் பெற்றுக்கொண்ட வாக்குகளை
பிரதேசவாரியாக நோக்கும் போது சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களில் பெருமளவானோர்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே வாக்களித்திருந்தனர்.
எனினும் பெரும்பான்மையினத்தவர்களின்
பெருமளவான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய
ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதனையடுத்து
சில பிரதேசங்களிலும், குறிப்பாக சமூகவலைத்தளங்களிலும் சிறுபான்மையினத்தவர்களை
அச்சுறுத்தும் வகையிலான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இந் நிலையில்
தமிழ் பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில்
மங்கள சமரவீர பதிவேற்றம் செய்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்து
ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் பெரும்பான்மை வாதத்தின் அழுக்கான
முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழில் காணப்பட்ட வீதிகளின் பெயர்கள்
அகற்றப்பட்டிருக்கின்றன.
ஜனாதிபதி
அவர்களே! இது குறித்த உங்களுடைய பிரதிபலிப்பிற்காக நாடு காத்துக்கொண்டிருக்கிறது
என்றும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment