Ads (728x90)

எதிர்வரும் நான்கு மாதங்களில் 375 அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கமைய நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அமைச்சும் தலா 25 அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தித் திட்ட யோசனைகளை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும். 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த திட்டங்களை முன்னெடுத்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget