Ads (728x90)

ராஜபக்ஷ தரப்பினரிடம் இன வாதம் மட்டுமே காணப்படுவதாகவும் இவர்களே நாட்டை சீரழித்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டும் அன்னத்திற்கு வாக்களித்து இன, மத பேதத்தை ஒழித்தோம். ஆனாலும் ராஜபக்ஷக்கள் தலையெடுத்து இனவாதத்தைக் கொண்டு மீண்டும் நாட்டைச் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள்.

ஒவ்வொரு விதமாக பல மட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். அதே போன்று தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

தலதாமாளிகைக்கு குண்டு வீசும் செய்தியைச் சொன்னவர்களும் இவர்கள்தான். அவர்களிடம் கையிருப்பில் இருப்பது இனவாதம் மட்டுமே.

கோத்தாவின் அறிக்கையை முழு நாடும் அறிந்திருக்கின்றது. எமது தேவைப்பாடு இனவாதமல்ல. அமைதியோடும் அபிவிருத்தியோடும் இலங்கையர் என்ற அடையாளத்தோடும் முன்னோக்கிச் செல்லுதல் என்பது மாத்திரமே நமக்கு உள்ளது.

அந்தத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் சஜித் பிரேம தாசவுக்கு மட்டுமே உள்ளது. எனவே சஜித்திற்கு வழங்குகின்ற வாக்கு ஒற்றுமைக்காகவும் இலங்கையர் என்ற அடையாளத்துக்காகவும் வழங்கப்படுகின்ற வாக்காகும். அதனால் நவம்பர் 16ஆம் திகதி சஜித்துக்கு வாக்களித்து ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.                         


Post a Comment

Recent News

Recent Posts Widget