Ads (728x90)

இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேற்று மாலை இந்தியாவை சென்றடைந்தார். கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்கவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget