இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர், இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளதுடன், இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தூதரகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தூதரக பணியாளரை அச்சுறுத்தினார்கள் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த விடயத்தை இலங்கையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான உடனடி விசாரணைகளை கோரியுள்ளோம் என சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment