Ads (728x90)

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரம் ருவன்வெலி சாய மண்டபத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

பதவியேற்ற பின்னர், உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பை பேணுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்தார்.

அனைத்து இனமக்களின் கௌரவமும் பேணப்படும். நான் பௌத்த பாரம்பரியத்தை கடைப்பிடித்து வாழ்பவன் என்ற அடிப்படையில், அனைத்து மக்களின் கலை, கலாச்சாரத்தை பேணி வாழும் சூழல் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். எனது ஆட்சியின் கீழ் ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.

எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களின் உரிமைகளை நான் பாதுகாப்பேன். எனது நிர்வாக அதிகாரங்களை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவேன். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.

நான் இம்முறை சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் எமது மக்களின் வாக்குகளால் வெல்லுவேன் என்று முழுமையாக நம்பினேன். ஆனாலும் தமிழ், முஸ்லிம் மக்களிடமும் என்னை நம்பி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவ்வாறு நடக்கவில்லை. இருந்தாலும் இந்த நாட்டின் மக்களாக உங்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து கொண்டு எனது பயணத்தை தொடர்வேன் என தெரிவித்தார்.







Post a Comment

Recent News

Recent Posts Widget