Ads (728x90)

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணி´ அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாற்று குழுவாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட தரப்பினர் இந்த முன்னணியுடன் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget