Ads (728x90)

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, மீளறிவித்தல் விடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வடக்கிலும், கிழக்கிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும் என்று கடந்த வருடம் ஜீலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன, நீதிமன்ற பதிவாளருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இன்றைய தினம், நீதிமன்றில் பகிரங்க அறிவிப்பை வெளியிட கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னதாக அனுமதி வழங்கியிருந்தார்.

சட்டத்தரணி ஊடாக, இராஜாங்க அமைச்சர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினம் அவர் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget