Ads (728x90)

ஜனவரி 1ம் திகதி தொடக்கம், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது இரண்டு கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget