மனித உரிமைகள், சட்ட ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தமது அமைப்பின் முக்கிய நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையின்றி சுற்றாடல் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை அடைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் செயற்படும் மனித உரிமை அமைப்புகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்படுவதுடன், அந்த அமைப்பூடாக குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக 812 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது.

Post a Comment