Ads (728x90)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொண்டாலும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபயவுடன் ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இலங்கையில் நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் நம்புவதாகவும் இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குவதாகப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமரின் இந்த வலியுறுத்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget