நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றால் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றிய 19 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகவே தோல்வியான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் “இந்து” பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டை நிருவகிக்க வேண்டுமானால் உறுதித் தன்மை அவசியமாகும். கடந்த காலத்தில் சிறிசேன- ரணில் அரசாங்கத்தில் உறுதித் தன்மை இருக்கவில்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி முறுகல் நிலைமை தோன்றியது. இவ்வாறு முறுகல் நிலைமைக்கு மத்தியில் நாட்டைக் கொண்டு செல்வது எவ்வாறு? இந்த நிலைமை நீடிக்கும் போது நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை எனவும் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment