அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 229 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இதனையடுத்து பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறியது.
பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும்.
செனட் சபையில் ட்ரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு ட்ரம்ப் பதவி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டன தீர்மானம் மீது அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் சபையின் குற்றப்பிரேரணையை எதிர்நோக்கியுள்ள மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment