ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வாகனத்தில் தமிழர்கள் கடத்தப்பட்டு முதலைக்கு இரையாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதில் தகவல் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் ராஜிதவே தம்முடன் 3 மில்லியன் ரூபா பேரம் பேசி இந்த தகவலை வெளியிட கோரியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து ராஜித நேற்று மாலை தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையை இன்று காலை விசாரித்த கொழும்பு பிரதான நீதிவான் முன் பிணை மனுவை நிராகரித்தார்.

Post a Comment