Ads (728x90)

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பேசிய ஜனாதிபதி சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நாளில் குறித்த பெண் பணியாளர் தூதரகத்திற்கு அருகில் இருந்து வாடகை கார் ஒன்றின் மூலம் பம்பலப்பிட்டிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் வாடகை கார் மூலம் மாளிகாகந்தை பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget