Ads (728x90)

சீரற்ற காலநிலையினால் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனங்களை செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுரை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையமும் ஒன்றிணைந்து அனர்த்தங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget