ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் ஹான்ஸ்பீட்டர் மோக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இடம் பெற்றது. இதன்போது கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது. இலங்கைக்கு எந்தத் தீங்கும் செய்ய விரும்பவில்லை என்று இதன்போது சுவிட்சர்லாந்து தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளின் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறோம். பதற்றமான இந்த சூழ்நிலையை நாங்கள் கடக்க வேண்டும் மற்றும் தவறான புரிதலை அகற்ற வேண்டும் என்று சுவிஸ் தூதர் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ இதுவரை நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை தூதருக்கு விளக்கினார்.
கடத்தல் என்பது மொத்த இட்டுக்கட்டல் என்பது இப்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத சான்றுகள் இந்த உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.
என்னையும் எனது அரசாங்கத்தையும் இழிவுபடுத்துவதற்கு தூதரக அதிகாரி சில ஆர்வமுள்ள தரப்பினரால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தொடர்புபட்டவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
இந்த சம்பவம் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டபோது சுவிஸ் தூதரகத்தின் ஆரம்ப எதிர்வினையில் எந்த தவறும் இல்லை என்று ஜனாதிபதி கூறினார். இது நியாயமானதே. அதன் பணியாளர்களில் ஒருவர் சிக்கலில் இருந்தால், தூதரகம் தலையிட வேண்டியது அவசியம் என்றார். உண்மை வெளிவரும் வகையில் விசாரணையை அதன் முடிவு வரை நடத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு தூதரை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இலங்கையுடனான பாரம்பரிய உறவுகள் வலுவாக இருப்பதில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியடைகிறது என்று தூதர் கூறினார். தூதரகத்தின் முதல் செயலாளர் சிடோனியா கப்ரியலும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment