ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த முன்னறிவித்தலுமின்றி அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பதட்ட நிலைக்கு ஆளாகியியுள்ளனர்.
நேற்று இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எந்த முன்னறிவிப்புமின்றி சென்றிருந்தார். பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை கண்காணித்த ஜனாதிபதி அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு வெளியேறினார். இதற்கு முன்னர் நாரஹேன்பிட்டிய பொருளாதார மையத்திற்கும் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சில தினங்களிற்கு முன்னர் களுபோவில வைத்தியசாலையை கடந்து சென்ற ஜனாதிபதி, வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், உரிய நேரம் வரும்வரை பூட்டப்பட்ட கதவிற்கு வெளியில் வெய்யிலில் நிற்பதை அவதானித்து, அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவிரவாக அங்கு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment