Ads (728x90)

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் குறித்த கார் சிக்குண்டது.

காரை செலுத்திய சாரதி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரை குத்தகைக்கு எடுத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த பகுதியில் திடீரென அதிகரித்த வெள்ளம் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் காரை செலுத்திய சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்குண்ட கார் பிரதேச இளைஞர்களின் கடும் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget