Ads (728x90)

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி, கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404 குடும்பங்களை சேர்ந்த 7762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதில் கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குடும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குமும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget