650 தொகுதிகளை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடஅயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பொரிஸ் ஜோன்சனின் கென்சர்வேட்டிவ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைபற்றியுள்ளது.
தொழிலாளர் கட்சி 203 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியுள்ளது. 1935ம் ஆண்டின் பின்னர் அந்த கட்சி சந்தித்த மோசமான பெறுபேறு இதுவாகும். இந்த தோல்விக்கான பொறுப்பை எற்று பதவிவிலகுவதாக கட்சி தலைவர் கோர்பன் அறிவித்துள்ளார்.
ஸ்கொட்லாண்ட் தேசிய கட்சி 48 ஆசனைங்களையும், லிபரல் ஜனநாயக கட்சி 11 ஆசனங்களையும் பெற்றுள்ளதோடு, ஏனைய கட்சிகள் 10 இற்கும் குறைவான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதில் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கோடி 39 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும், ஜெரிமி கோர்பின் தொழிலாளர் கட்சிக்கு ஒரு கோடி 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment