அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோ நாட்டரசி 98 ரூபாவாகவும், சம்பா அரசி 99 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
சந்தையில் கட்டுப்பாடற்ற விதத்தில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் கோதுமை மாவுக்கான வரியை குறைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இத்தீர்மானங்களுக்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment