இலங்கை சீத்தாஎலியவில் அமைந்துள்ள சீதா அம்மன் கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூபா 05 கோடி நிதி வழங்கவுள்ளது. மேலும் இந்த கோயில் புனரமைப்பு பணியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை வந்திருந்தனர். இவர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் சீதையை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூபா 05 கோடி ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை ஆரம்பியுங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment