தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 1,000 ரூபாயை வழங்க முடியாதென்றும், 1,000 ரூபாய் வழங்குவதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை செயற்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை சேவையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சம்பளத்தை அதிகரிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களை கட்டாயப்படுத்துவது இலங்கையின் சட்டதிட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் அதேவேளை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 98ஆவது கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணானது என்றும் இலங்கை சேவையாளர்கள் சம்மேளனத்தின் பணிப்பாளர் கனிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை செயற்பாட்டில் இருக்குமு் என்றும், இதற்கமைய சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றும் இலங்கை சேவையாளர்கள் சம்மேளனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment